தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிறைவு பாராட்டு விழா, சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்டத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரமேஷ்பாபு வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
நிறுவனத் தலைவர் மாயவன் பணி நிறைவுபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழா பேருரையாற்றினார். மாநிலத் தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் குமரேசன், மாநில பொருளாளர் விஜயசாரதி, மாநில துணை பொதுச்செயலாளர் மாயகிருஷ்ணன், மாநில மகளிரணி செயலாளர் மதுரா, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் நளினி மற்றும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், மாநில, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார்.


சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை / 9442979467 எதிரொலி / 8939476777
