மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல். மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
