சித்திரை மாதம் ஆரம்பம்  தமிழ் புத்தாண்டு அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளுடன் சாமி சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது நடைமுறை பழக்கமாக உள்ளது.
     
அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சின்னக்கடை பஜாரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 45-ம் ஆண்டாக தமிழ் புத்தாண்டு அன்று துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து அருள்பாலித்தார்.
   
இந்நிலையில், 200 -க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞிகள் வித ... விதமான ... பூக்களை தட்டுகளில் ஏந்தி சின்னக்கடை பஜாரிலிருந்து, கீழப்பள்ளிவாசல் பகுதி, லெனின் தெரு, நகைக்கடை பஜார், காந்திசிலை பகுதி, கல்பட்டறை பகுதி, சென்குப்தா தெரு, எல்லைப்புற காந்திஜி தெரு , காய்கறி கடை பகுதி, ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பகுதி, காந்திஜி ரோடு, மீன்கடை பஜார், பூக்கடை பஜார், ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வராள் கோவில் பகுதி வழியாக சின்னக்கடை பஜாரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தை சென்றடைந்து
       
ஸ்ரீ துர்க்கை அம்மன் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, மரிக்கொழுந்து, அரளி பூ உள்பட பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  சிறப்பு தரிசனத்தில் வீற்றிருந்தார்.
        
சுவாமியை தரிசனம் செய்ய பெருந்திரளாக குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பக்தர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்து  அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.
      
பூச்சொரிதல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் டிரஸ்டி மா. மணவாளன் உள்பட கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

மாமுஜெயக்குமார் :
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed