மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு நேற்று 9 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள்திரும்ப பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மனு தாக்கல் செய்தவர்கள் யாரும் திரும்பப் பெற வரவில்லை. அதனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒதுக்கப்பட்ட சின்னங்கள் தவிர்த்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சண்முக வடிவேல் சின்னங்கள் ஒதுக்கினார். அதன் பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது அதன் விவரம் வருமாறு :-

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:

1.நாம் தமிழர் -நாகலட்சுமி
2.அ.தி.மு.க. – மாணிக்கம்,
3.தி.மு.க. – வெங்கடேசன்,
4.த. வெ.க. – கருப்பையா
5.வாழ்வுரிமைக் கட்சி
– தங்கப்பாண்டி,
6.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள்முன்னேற்ற கழகம் -டாக்டர் க. பாலமுருகன்.
7.புதிய தமிழகம் – ரகு ,
8.ராமதாஸ் (சுயே)
9.அஜய் சுபாஷ். (சுயே)
10.கிருஷ்ணசாமி (சுயே)
11.குணசேகரன் (சுயே)

  1. ச. பாலமுருகன் (சுயே)
  2. ரா. பாலமுருகன் (சுயே)
  3. ரஞ்சித்குமார் (சுயே)
    ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    உடன் உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் இருந்தனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed