மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெங்கடேசன் எம் எல் ஏ வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வாக்காளர்களை சந்தித்தார் குறிப்பாக முள்ளி ப்பள்ளம் கிராமத்திற்கு வருகை தந்த வெங்கடேசன் எம் எல் ஏ விற்கு ஆள் உயர மாலை அணிவித்தும் வெற்றிலை மாலை அணிவித்தும் முதல்வர் ஸ்டாலின் போல் வேடம் அணிந்தவர் வாக்குகள் சேகரித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா ஏற்பாட்டில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் முள்ளி ப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் சங்கையா கோவில் வரை வரிசையாக நின்று திமுக வேட்பாளர் வெங்கடேசன் எம் எல் ஏ விற்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் வழிநெடுக பொதுமக்களின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் வெங்கடேசன் எம் எல் ஏ கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்கள் குறிப்பாக முள்ளி பள்ளம் ஊராட்சிக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்தார்.

இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் மற்றும் நிர்வாகிகள் சிபிஆர் சரவணன் வக்கீல் முருகன் முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி முட்டை கடை காளி இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மற்றும் தேமுதிக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து தென்கரை ஊராட்சியில் கிளைச் செயலாளர் சோழன் ராஜா ஏற்பாட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு திமுக வேட்பாளர் வெங்கடேசன் எம் எல் ஏவிற்கு பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் தொடர்ந்து ஊத்துக்குளி நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனக்கு சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முள்ளி ப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலக முன்பு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சப்பானி தலைமையில் ஜீவபாரதி வார்டு செயலாளர் முருகானந்தம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் காளிதாஸ் அசோக் மலைச்சாமி ஆகியோர் வெங்கடேசன் எம் எல் ஏ விற்கு ஆள் உயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் திருவேடகம் கிராமத்தில் திமுக நிர்வாகி சி பி ஆர் சரவணன் ஏற்பாட்டில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வெங்கடேசன் எம் எல் ஏ விற்கு வரவேற்பு கொடுத்தனர் இதில் கிளைச் செயலாளர் ராஜா என்ற பெரிய கருப்பன் நீல மேகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
