நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 - ஐ முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதம் வாக்கு அளிக்கும் விதத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முன்னின்று செயல்படுத்தி வருவதை நடைமுறை பழக்கமாக கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில், கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றத்தின் சார்பில் 100 சதம் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் மாணவியர்கள் முகவர்ணம் பூசி கல்லூரி வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில், வருகின்ற 23.04.2026. (வியாழன்) அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி மாணவியர்கள் முகத்தில் வர்ணம் பூசிக் கொண்டு, வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கை விரலில் மை பதிந்திருப்பதை பிரதிபலிக்கும் முறையில் விழிப்புணர்வு நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவரின் வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற கருத்தை மாணவர், மாணவியர்களிடமும் பொதுமக்களிடமும் பரப்பும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் எதிரொலி / 8939476777
