திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா. எஸ் ஆர் வி நகர், ஹார்விபட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்:

இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டு மக்களை தேடி மருத்துவம் என்று கொண்டு வந்தார்கள். ஆனால் மக்களை தேடி எப்போதாவது மருத்துவம் வீட்டிற்கு வந்ததா. தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளர், உளவுத்துறை அதிகாரிகளை மாற்றி விட்டார்கள். அதிகாரிகள் தவறு செய்யும் காரணத்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.

மகளிர் உரிமைத் தொகையை சட்டமன்றத்தில் போராடி நாங்கள் பெற்று கொடுத்தோம் எங்கள் ஆட்சியில் அது 2000 ஆக கொடுக்கப்படும்.

பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழலை இந்த அரசு உருவாக்கி விட்டது. குற்றவாளிகள் 90 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவர வேண்டியவர்கள் 30 நாளில் இந்த அரசு வெளிவர வைக்கிறது. நிர்வாக சீர்கேடான இந்த அரசை வெளியேற்ற வேண்டியது நமது கடமை என கூறினார்.

செய்திகள்: காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed