அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு, இரண்டு நாட்களில் குடோன்களுக்கு மூடைகளை எடுத்துச் செல்லாவிட்டால் அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை மறியல் செய்யப் போவதாக எச்சரிக்கை,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று தற்போது கொள்முதல் நிலையங்களில் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகள் மூடைகளாக பிடிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வாகனங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் மழை நீர் தேங்கி நெல் மூட்டைகள் சேதமடைந்து நெல் மணிகள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூர் கிராமத்தில் வயல்வெளிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அறுவடை செய்த நெல் மணிகள் குவியல் குவியலாக குவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 10,000ற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பிடிக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிகாரிகள் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்து செல்லாத நிலையில் தற்போது வெயிலிலும் மழையிலும் காய்ந்தும் நனைந்தும் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால் முறையான பதில் அளிப்பதில்லை எனக் கூறும் விவசாயிகள் தேர்தல் வேலை பார்ப்பதால் தற்போது குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வழி இல்லை என அதிகார தோரணையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இரண்டு நாட்களுக்குள் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்து செல்லவில்லை என்றால் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக கொள்முதல் நிலையங்களுக்குள் புகுந்த மழை
நெல் மணிகளில் தேங்கி கிடக்கிறது இதன் காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைந்து நெல் பயிர்கள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகையால், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்,

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed