தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026 ஐ முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சேதுபதி கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர், மாணவியர்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் , மாவட்ட தேர்தல் அலுவலரும் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தசிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் கல்லூரி மாணவர் , மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக , ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் கல்லூரி மாணவர், மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து , மாவட்ட தேர்தல் அலுவலரும் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கல்லூரி மாணவர் , மாணவியர்களுடன் சேர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் , தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு , சேதுபதி கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெ.சீனுவாசகுமரன் , உதவி திட்ட அலுவலர்கள் தங்கப்பாண்டியன் , சித்ராதேவி, செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், கல்லூரி விரிவுரையாளர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
