மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு நீதி அரசர் ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
திமுக பொதுக்குழு உறுப்பினர் கிரி சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சோழவந்தான் நகரின் முக்கிய பிரமுகர்கள் வர்த்தகர்கள் வியாபாரிகள் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பேச்சு போட்டி கட்டுரை போட்டி இலக்கிய போட்டி ஓவியப்போட்டி மாறுவேட போட்டி உள்ளிட்ட போட்டிகளில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது ஆண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வை தத்ரூபமாக
மாணவ மாணவிகள் நிகழ்த்தி காட்டியது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன் பெரும் கரகோஷத்தையும் ஏற்படுத்தினார்கள்.

சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பள்ளி தாளாளர் எம் மருது பாண்டியன் பாஜக மாநில நிர்வாகி மணி முத்தையா பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணி முத்தையா ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர் பள்ளி முதல்வர் தீபா ராகினி நன்றி கூறினார்
செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
