மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கி மாணிக்கம் தனது வேட்பு மனுவை வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார் முன்னதாக வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலையிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார் வழிநெடுக தொண்டர்கள் பொதுமக்கள் வேட்பாளர் மாணிக்கத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனைத் தொடர்ந்து வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் கடந்த 2016 முதல் 2021 வரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ள நிலையில் மீண்டும் தற்போது அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வரும் மாணிக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம், சோழவந்தான் பேரூர் கழகம் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் மாணிக்கத்திற்கு மேலக்கால் திருவேடகம் கச்சிராயிருப்பு நாராயணபுரம் ஊத்துக்குளி தென்கரை முள்ளிப்பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் தொடர்ந்து இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உடன் ஒன்றிய செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன் வாடிப்பட்டி வடக்கு மு காளிதாஸ் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு தாலுகா அலுவலகம் முன்பு
கட்சியினர் அவருக்கு சால்வை மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஏற்பாட்டில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மாணிக்கத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் இதில் கழக நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்
செய்திகள் : காளமேகம் எதிரொலி. / 8939476777
