திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, இன்று வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பாரம்பரிய வேளாண்மை மற்றும் கிராமிய வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது மாட்டுவண்டி, ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாய் ஆகியவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பிரதிபலிப்பதாகவும், அவர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நாளிலேயே இவ்வாறு தனித்துவமான முறையில் வந்த சத்யா தேவி, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed