சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், சாலைக்கிராமம் வருந்தியில் செயல்பட்டு வரும் நல்மேய்ப்பர் மெட்ரிக் பள்ளியில் யூகேஜி மாணவர் - மாணவியர்களுக்கு 21 - ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு , தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.இளங்கோவன் தலைமையேற்று 56 மாணவர் - மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி தலைமையுரை ஆற்றினார்.
தனியார் பள்ளிச் செயலாளர் பாரதிக் கண்ணன், சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதுநிலை தமிழாசிரியர் மாரியப்பன், நல்மேய்ப்பர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் செல்லத்துரை, பொருளாளர் சித்ரா, முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன் ஆகியோர் பங்கேற்றனர்,
முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் சோபனா அனைவரையும் வரவேற்றார்.
விழா நிகழ்வுகளை ஆசிரியைகள் ரூபி, ஐஸ்வர்யா ஆகியோர் ஒருங்கிணைத்து, தங்களது இனிமையான குரலில் திறம்பட தொகுத்து வழங்கினர்.
பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.


பள்ளியின் முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன் நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி / 8939476777
