கவிஞரும், நாடகாசிரியருமான முனைவர் சிவகாசி பாலமுருகனுக்கு “கற்பனைச் செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 273- வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக் கூட்டம், பென்னிங்டன் நூலகக் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பெருமன்றத்தின் தலைவர் பிரபல சோதிடர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். ஆண்டாள் கோவில் தலைமை அர்ச்சகர் முத்து பட்டர் முன்னிலை வகித்தார். கவிஞர் க. ஸ்ரீசக்தி நெறியாளுகை செய்தார். நூலகர் கந்தசாமி, சங்கீத வித்வான் மோகன் ஆகியோர் இறை வாழ்த்துப்பாடல்களைப் பாடினார்கள்.

விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் ராமகிருஷ்ண பாண்டியன் வரவேற்றார். எழுத்தாளர் முனைவர் பாலமுருகன் எழுதி வெளியிட்டுள்ள நூல்களை விமர்சித்து, முனைவர் மணிமேகலை, கவிதாயினி மகேஸ்வரி, வழக்கறிஞரும், எழுத்தாளருமான ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவனணைந்த பெருமாள், முனைவர் சிவநேசன் ஆகியோர் பேசினார்கள். “இராமாயணத்தில் சகோதர பாசம்” என்ற தலைப்பில் பட்டிமன்ற நடுவர், தமிழ்ச்செம்மல் சிவகாசி கா.காளியப்பன் உரையாற்றினார். எழுத்தாளர் சிவகாசி பாலமுருகனுக்கு “கற்பனைச் செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது. கவிஞர் பாலமுருகன் ஏற்புரை நிகழ்த்தினார்.
இறுதியில் ஜி. அங்குராஜ் நன்றி கூறினார். விழாவுக்கான பொருட்செலவுகளை ஓய்வு பெற்ற நூலகர் கந்தசாமி ஏற்றிருந்தார்.
செய்திகள் சுந்தர்ராஜன் & சிவன்ராஜன் / 8939476777
