அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (IJU) 11 வது பேரவை கூட்டம், விஜயவாடாவில் உள்ள தும்மலபள்ளி வாரி கலாசேத்ராவில்,
27, 28 & 29 ஆகிய தேதிகளில்
நடைபெற்றது. அந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பத்திரிக்கையாளர் சங்கங்களின் மாநில தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தேசிய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அதில், ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய போது,
இந்தியாவில் பத்திரிகைத் துறை முந்தைய காலங்களை போல் தற்போது இல்லை எனவும், பத்திரிக்கை துறை பல ஆண்டுகளாக அதன் உண்மை தன்மையில் இருந்து மாறிவிட்டதாகவும், அதற்கு காரணம், ஊடகங்களின் ஒரு பிரிவு கட்சி மற்றும் அரசியல் சார்பாக மாறிவிட்டதாகவும்,
இப்படி பத்திரிக்கை துறை அரசியல்வாதிகளின் கைக்கு செல்வது, “இது சமூகத்திற்கு ஆபத்தான போக்கு” என்றும் குற்றச்சாட்டினார்.

மேலும், அவர் பேசுகையில், அரசியல்வாதிகள் ஊடக நிறுவனங்களை வைத்திருப்பதை எதிர்த்து, தொழில்முறை ஊடகத்தையும், அரசியல் ஊடகத்தையும் பிரிக்க வேண்டியதன் அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார். அவசர நிலை பிரகடனம் மற்றும் போபர்ஸ் ஊழல் குறித்த ஊடகங்களின் செய்திகளை மேற்கோள் காட்டி, ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்த வரலாற்றில் முக்கிய தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார். ஊடகங்கள் எழுப்பிய பிரச்சினைகளை அவர் தீர்த்து வைத்த நேரங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு (ஏ.பி.யு.டபிள்யு.ஜே) அமராவதியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்குவது உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் பிரச்சினைகளை தான் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். ஆந்திர பிரதேச சட்டசபையில் அமராவதி தலைநகராக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமராவதியை “ஹைதராபாத் பிளஸ்” என்று சந்திரபாபு நாயுடு கூறினார். தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து, பசுமை நகரமாக இது இருக்கும் என்றார்.

முன்னதாக, ஆந்திர மாநில பத்திரிக்கையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முதல்வரிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். அவைகள் அனைத்தையும் கண்டிப்பாக நான் நிறைவேற்றி கொடுப்பேன் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார்.

ஆந்திர பிரதேசத்தின் தகவல் துறை அமைச்சர் கே. பார்த்தசாரதி பேசுகையில்; தங்களுடைய அரசியல் கட்சி ஆட்சியில் இல்லாத போதும், போராட்டங்கள் மற்றும் இயக்கங்களுக்கு ஆதரவளித்ததற்காக ஊடகங்களை பாராட்டினார்.

பின்னர், இறுதி நாள் நிகழ்ச்சியில், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சந்திரசேகர் கலந்து கொண்டார். அவரை வரவேற்று பேசிய, அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகி சீனிவாச ரெட்டி அவர்கள் அமைச்சரின் பெயரை சந்திரசேகர ராவ் என குறிப்பிட்டு பேசியபோது, அதற்கு ஆட்சவனை தெரிவித்த அமைச்சர், தன் பெயரை வெறும் சந்திரசேகர் என்று குறிப்பிட்டு பேசுமாறு கூறினார். அப்போது, அரங்கில் இருந்த அனைத்து பத்திரிகையாளர்களும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை போல ஆந்திராவிலும் அரசியல்வாதிகள் இடையே சமூகநீதி பார்வை பரவி வருவதை உணர்ந்து, கைத்தட்டி ஆரவாரம் செய்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.

அப்போது அவர் உரையாற்றுகையில் ; கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு ரயில்வேயில் இருந்த சலுகைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளை மீண்டும் பெற்றுத் தருமாறு நீங்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். அந்த கோரிக்கை குறித்து, ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் நான் பேசி, கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்த அதே சலுகைகளை மீண்டும் பத்திரிக்கையாளர்கள் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சுபாஷ் அவர்கள் பேசுகையில்; தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர் நல வாரியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையும், மற்றும் பல மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டதன் விவரங்களை பற்றியும் பேசினார். குறிப்பாக, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் துவக்கி 35 ஆண்டு ஆனதை முன்னிட்டு, இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் டி.யூ.ஜே 35 மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடும் பேசினார்.

பின்னர், அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் (IUJ வின்) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகளின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த அகில இந்திய பத்திரிகையாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ், பொது செயலாளர் தோழர் கே. ரமேஷ்குமார், புதுச்சேரி மாநில தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா, ஆகியோருடன் தேசிய குழு உறுப்பினர்கள் ஐயா எம்.டி. இராமலிங்கம், கோவை எஸ். மோகன்ராஜ், சதயம் பாபு, அலெக்ஸ் புரூட்டோ, காயல் அகமது சாகிபு, தூத்துக்குடி சங்கர், மஹாவீர் சந்த் ஜெயின், எழில் ஆசீர்வாதம், A1 கண்ணன், தருமபுரி சுரேஷ், தோழர் உமாபதி கிருஷ்ணன், டாக்டர் கே.வி.தேவராஜன், MJF Dr.T. தேவராஜ், K.A.T. அன்சாரி, P.G. பாலகிருஷ்ணன், மதுரை P. பாண்டியராஜன், காஞ்சிபுரம் S.R. மணிகண்டன், கிருஷ்ணகிரி C.S. சசிகுமார், தோழர் முத்து கண்ணன், ஆகியோருடன் சிறப்பு பிரதிநிதிகளாக, மாநில துணை தலைவர் கழுகு கே. ராஜேந்திரன், தூத்துக்குடி புறநகர் மாவட்டத் தலைவர் J. இருதய ஞான ரமேஷ், தலைமை அலுவலக நிர்வாகி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed