வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்திய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதன்படி 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டி பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எனது உரிமை எனது வாக்கு என்ற கையெழுத்து பிரச்சாரத்தினை பொன்னேரி தனி சட்டமன்ற தொகுதி தேர்தல் மொத்தம் அலுவலர் ரவிச்சந்திரன் கையெழுத்திட்டு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

எனது உரிமை எனது வாக்கு என்பதை வலியுறுத்தும் உறுதிமொழியினை வாசிக்க கோட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செல்வகுமார் ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் சித்ரா,தேர்தல் துணை வட்டாட்சியர் மதன்மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்திகள் : லோகநாதன் / எதிரொலி / 8939476777


