மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென கனமழை பெய்ததில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து நேற்றும் மாலை 4 மணிக்கு மேல் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது மழையின் காரணமாக சோழவந்தானிலிருந்து நகரி செல்லும் சாலையில் ரிஷபம் கிராமத்திற்கு முன்பு மிகவும் பழமை வாய்ந்த மரம் சாலையின் நடுவில் விழுந்து அருகில் வயல்வெளிகளில் சென்ற மின்கம்பத்தின் மீது விழுந்து மின்கம்பங்களும் சாய்ந்தது.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் சோழவந்தானிலிருந்து நகரி வழியாக மதுரை செல்லக்கூடிய பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக ரிஷபம் திருமால் நத்தம் ராயபுரம் நகரி ஆலங்கொட்டாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது பேருந்துகளும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதால் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது சாலையில் விழுந்த மரத்தை அகற்றுவதற்கு சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் முயற்சி செய்தனர். தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் இது போன்ற பெரிய மரங்கள் உள்ளதால் அடுத்தடுத்து வரும் மழை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பட்டுப்போன மரங்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777
