வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் துணிந்து வாக்களிக்க வலியுறுத்தி, விருதுநகரில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு சென்றனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கொடி அணிவகுப்பு விருதுநகரில் உள்ள மாவட்ட நூலகத்தில் தொடங்கி சர்ச் ரோடு, கச்சேரி ரோடு, மெயின் பஜார் வழியாக வடக்கு ரதவிதி, மேலரத வீதி, பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக கே வி ஸ் அடலி பள்ளியில் முடிவடைந்தது இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

செய்திகள் : சிவன்ராஜ் & சுந்தர்ராஜன் விருதுநகர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed