மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் அவலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது, காடுபட்டி ஊராட்சி இங்கே தற்போது கலையரசி ராதிகா நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தாய்க்கிழவி பவுன் தாய் வீடாக படப்பிடிப்பு செய்யப்பட்ட வீட்டின் முன்பு காடுபட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கையால் சாக்கடை கழிவை சுத்தம் செய்து வருகின்றனர்.

இது மனிதப் பேரவலம் இது போன்ற தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்து வருவது அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலும், இது அரசு நிர்வாகத்தின் மிகப்பெரிய முறைகேடு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் அந்த விதிமுறைகள் காற்றில் பறக்க விடபட்டுள்ளன.

வாடிப்பட்டிவட்டார வளர்ச்சி அலுவலர் இதுபோல பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தாழ்த்தப்பட்டவர்களின் பாதுகாவலன் என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரடி ஆய்வு மற்றும் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியான விசாரணை செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக தற்போது தமிழகத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தாய்க்கிழவி படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காடுபட்டி கிராமத்தில் உள்ளவீட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed