தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் அரசின் முடிவுற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கட்டிடங்களுக்கான அடிகல் நாட்டும் விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்திய செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


முன்னதாக அவர் விழாவில் பேசுகையில் வடலூரும் கடலூர் ஆகலாம் என வடலூர் வள்ளலார் அவர்கள் கூறி இருக்கிறார் அதனை மெய்பிக்க வேண்டும் என்றால் வடலூரை பார்த்தால் தெரியும் எனவும்,
மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டங்களும், நமக்கு அவர்கள் வழங்கும் நிதிகளினாலேயே இது சாத்தியமாகிறது என அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் என் எண்ணங்களை போல மாவட்ட ஆட்சித்தலைவர் எண்ணங்களும் ஒத்து இருப்பதால் இந்த மாவட்டத்திற்கு நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.


ஊர் கூடி தேர் இழுப்போம் அது நல்ல தேராக இருக்கும் அதில் உங்களின் பங்கு இருக்க வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம் மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
எதிரொலி / 8939476777
