ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் வழங்கும் விழா நடைபெற்றது.  
      
விழாவிற்கு,ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன்  தலைமையேற்று மாணவர், மாணவியர்களுக்கு கல்விக்கடனுக்கான காசோலையினை வழங்கினார்.
  
விழாவில் , மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் 14 மாணவர் , மாணவியர்களுக்கு ரூ.1.12 கோடிக்கு கல்விக்கடனுக்கான காசோலையினை மாணவர் , மாணவியர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் வழங்கியதுடன். மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் இதுவரை மொத்தம் 988 மாணவர் , மாணவியர்களுக்கு ரூ.24.56 கோடி கல்விக்கடனுக்கான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 
     
மேலும் , உயர்கல்வி பெறும் மாணவர், மாணவியர்கள் கல்விக்கடன் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற்றிட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன்  தெரிவித்துள்ளார்.
  
நிகழ்ச்சியில்,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா. விஜயகுமார் உள்பட கடன் உதவி பெறும் மாணவர் - மாணவியர்கள், வங்கி  -  அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed