இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை வடக்கு கிளை செயலாளர் சேகர் வரவேற்புரையாற்றினார். தமிழாடு அறிவியல் இயக்க மதுரை வடக்கு கிளைத் தலைவர் முனைவர் கண்ணன் தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேனாள் மாநிலத் தலைவர் முனைவர் தினகரன் “கீழடியும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்” என்ற தலைப்பில் கார்பன் வயது கணிப்பு மற்றும் ESR, DNA உள்ளிட்ட பல்வேறு ஆய்வு முறைகள் குறித்து மாணவர்களிடம் கருத்துரை வழங்கினார்.

அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி சிறப்புரையாற்றினார். அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் பேராசிரியர் ராஜமாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார். உதவித் தலைமையாசிரியர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் கோகுல்ராஜ் மற்றும் முகமது இர்பான் தமிழர்களின் தொண்மை மற்றும் கீழடி கண்டுபிடிப்பு குறித்து பேசினர்.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விஞ்ஞானி சி.வி.ராமன் அவர்களின் கண்டுபிடிப்பை சிறப்பிக்கும் வண்ணம் அவரின் முகமூடி அணிந்து மாணவர்கள் அறிவியல் தின உறுதிமொழி ஏற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மதுரை வடக்கு கிளை துணைத் தலைவர் கற்பகவள்ளி நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் தீபம் மகளிர் குழு இணைச்செயலாளர் ஜாகீர் நிஷா மற்றும் கிளைப் பொருளாளர் செல்வி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்திகள் : களமேகம் / மதுரை எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *