கோவில் குளத்தை தூர்வாரி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் குளத்தின் ஆழ பகுதிக்கு பக்தர்கள் செல்லாதவாறு இரும்பு கம்பிகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை.

கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் தாலுகாவுக்கு உட்பட்ட அரசன் குட்டை தெருவை சேர்ந்த விக்னேஷ் 17 இவர் 12ம் வகுப்பு படித்து வரும் நிலையில்,
அதே பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் காப்பு கட்டி நேற்று தீ மிதிக்க செல்வதற்கு முன்பு, பூவராக சுவாமி திருக்கோவில் பின்புறம் உள்ள தீர்த்தவாரி குலத்திற்கு குளிக்க நண்பருடன் சென்றுள்ளார்.

அப்போது, குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் இருந்து தலை குப்புற குதித்ததாக கூறப்படுகிறது. இருவர் குதித்த நிலையில், விக்னேஷ் மற்றும் குளத்தில் நடுவே சேற்றில் சிக்கிக்கொண்டு மேலே வராமல் இருந்துள்ளார். அருகில், இருந்தவர்கள் தேடிய போது விக்னேஷ் கிடைக்காததால் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தேடிய போது, விக்னேஷ் சேற்றில் தலை சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு விருத்தாச்சலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மன் கோவிலுக்கு காப்பு கட்டி தீ மிதிக்க வந்த 12 ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் உறவினர்கள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்த்தவாரி குளத்தில் பொதுமக்கள் பக்தர்கள் அடிக்கடி உயிரிழந்து வருவதால், குளத்தை தூய்மைப்படுத்தி தூர்வாரி குளத்தின் நடுவே யாரும் செல்லாத அளவிற்கு இரும்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி பொதுமக்கள் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed