மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்த நிலையில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை சில நாட்களுக்கு முன்பு கொட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது ஜல்லிக கற்கள் கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் சாலை அமைக்கப்படாததால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, திருவிழா மற்றும் சுப தினங்களில் இங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆனால், ஜல்லி கற்கள் கொட்டி பல நாட்கள் ஆன நிலையில் சாலை அமைக்காத நிலையில் இருசக்கர வாகனங்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலையிலும் அரசு போக்குவரத்து பணிமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்த செல்லும் பக்தர்கள் ஜல்லி கற்கள் கொட்டியுள்ள சாலையில் நடந்து செல்ல சிரமப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலையை உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க பக்தர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை செய்தியாளர் : எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed