தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமர்ந்து அருள்பாலிக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் தவத்திரு மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில், மாயாண்டி சுவாமிகளால் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ‘திருநீலகண்ட நாயனாருக்கு’ தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் குருபூஜை விழா, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.


தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் வடை பாயாசத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும், திருநீலகண்டர் நாயனார் குயவர் சமூக நலச் சங்கம் அமைப்பாளருமான ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கைங்கர்யக் கமிட்டி நிருவாகிகள் செய்து இருந்தனர்.

நெல்லை செய்தியாளர்:
செ.பா.தவசிக்கனி எதிரொலி /8939476777
