கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

கடந்த எட்டாம் தேதி பந்தக்கால் நட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது, வாஸ்து பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, ஸ்ரீ நாகம்மாளுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகாதீபாரதானை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கடலூர், புதுச்சேரி விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed