தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டம், உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் உள்ளூர் திருவிழா ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி வருகிற 13-ஆம் தேதி சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

உவரி அந்தோணியார் திருத்தலத்தை சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் பங்கேற்கும் இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறுவர், வாலிபர்கள், பெண்கள், பெரியவர்கள் பங்கேற்ற பல வகையான விளையாட்டுப் போட்டிகள் உவரி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தலத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த உள்ளூர் திருவிழா, உவரி கோடி அற்புதர் புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருத் தந்தைகள், நிதிக்குழுப் பொறுப்பாளர்கள் மற்றும் உவரி இறை மக்கள் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்று வருகின்றன.
வருகிற 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு ஆராதனை நடைபெற உள்ளது.

தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு சப்ரப்பவனி நடைபெறும். வருகிற 13 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு கூட்டுத் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு உள்ளூர் திருவிழாவை முன்னிட்டு நற்கருணை பவனி உவரி நகரின் முக்கிய வீதிகளுக்கு செல்ல உள்ளது. இந்த திருப்பவனியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் உள்ளூர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி, நெல்லை மாவட்டம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed