திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று வைகாசி மாதம் இரண்டாவது கார்த்திகை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் இருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சர்வ அலங்காரத்தில் சிம்மாசன வாகனத்தில் எழுந்தருனார்.
அதன் பின்பு வீதி உலா புறப்பட்டு சுவாமி சன்னதி தெரு, மேல ரத வீதி, கீழரத வீதி, உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வீதி .வந்தார். அப்போது ஆங்காங்கே பக்தர்கள் சுவாமிக்கு திருக்கண் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
