திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆமூர் ஏரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சவுண்டு மண் எடுப்பதற்காக குவாரி நடத்தப்பட்டது. அந்தக் குவாரியில் இருந்து சாலை அமைப்பதற்காக குறிப்பிட்ட அளவு தான் மண் எடுப்போம் என கூறிவிட்டு, தினமும் பல்லாயிரக்கணக்கான லாரிகளை வைத்து மாதக்கணக்கில் அந்த லாரிகள் ஆம்பூர் ஏரியின் உள்ளிருந்து கனரக வாகனங்கள் மூலம் மண் எடுத்து செல்லப்பட்டது.

அப்பொழுது, அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அந்த குவாரீஸ்வரனங்கள் நிறுத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளும், குவாரி நடத்தியவர்களும் குவாரி முடிந்தவுடன் சாலையை சரி செய்வதாக உறுதி அளித்தனர்.
ஆனால், குவாரி முடிந்த பிறகு பாரி நடத்தவர்களை பார்க்கவே முடியவில்லை, அப்படி தேடிப்பிடித்தாலும் அவர்களிடம் சரியான பதில் இல்லை, மேலும் அப்போது இருந்த அதிகாரிகளும் மாற்றலாகி சென்று விட்டதால், சேதமடைந்த அந்த சாலையை சரி செய்யாமல் விட்டுவிட்டனர்.

அதனை தொடர்ந்து தொடர் மழை பெய்தது சாலை குண்டும் குழியுமாய் ஆகிவிட்டது. அதனால் பள்ளிக்கு செல்லக்கூடிய பிள்ளைகளும் வேலைக்கு செல்லக் கூடியவர்களும் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியில் செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்ற சூழ்நிலை இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல்,
மாதவரம், ஆமுர், மாளிவாக்கம், கங்கையாடி குப்பம் போன்ற கிராமங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, விழுப்புரம் கோட்ட போக்குவரத்து துறை நிர்வாகத்திற்கு சொந்தமான, T 41 என்ற வழித்தடத்தில், ஒரு பேருந்து பொன்னேரியில் இருந்து செங்குன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது. சாலை சரியில்லாத காரணத்தால், அந்த பேருந்தை அந்த சாலையின் வழியாக இயக்க முடியாது எனக் கூறி, பொன்னேரி பணிமனை நிர்வாகம் அந்தப் பேருந்தின் இயக்கத்தை, தற்போது நிறுத்தி வைத்திருக்கிறது.

அதனால், அந்த சாலையின் வழியாக, தினசரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் கூட அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து சாலையை சீரமைக்க கோரி, அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகள் பலரிடம் மனு அளித்த நிலையிலும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பேருந்து வசதி மற்றும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொன்னேரி செய்தியாளர் : மாளி,மகேஷ், / எதிரொலி / 8939476777

