மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நில எடுப்பு தொடர்பாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு 5 சென்ட் இடம் வழங்க கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 200 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் தற்போது கவனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்கள் கைகளில், சின்ன உடைப்பு தேவேந்திர குல மக்களை வஞ்சிக்காதே, 2026 சட்டமன்றத தேர்தலில் ஜனநாயக புரட்சி வெடிக்கும் என வாசகங்கள் எழுதி பேனர்கள் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


64 குடும்பங்களுக்கு மட்டுமே மீள்குடி அமர்வுக்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களது வாரிசுதாரர்கள் அருகாமையில் வீடு கட்டி குடியிருப்பவருக்கு மொத்தம் 250 பேருக்கு மீள்குடி அமர்வு செய்து தர வேண்டும் எனவும், இன்று விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


சின்ன உடப்பு கிராமத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 5 சென்ட் முதல் 10 சென்ட் வரை வழங்கியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு அதே அளவில் நிலம் வழங்க கோரியும், இரண்டு சென்ட் தற்போது வருவாய் துறை வழங்கியுள்ள இடத்திற்கு செல்ல அது வெகுதொலைவில் இருப்பதால், அதை மறுத்து, சின்ன உடைப்பு அருகிலேயே வேறு பகுதியில் இடம் வழங்க அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை செய்தியாளர் : காளமேகம் எதிரொலி / 8939476777
