மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சருக்கு மருத்துவமனை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சிறுவனுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மருத்துவமனை பணியில் இருந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து சோழவந்தான் அருகே நகரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள வயல்வெளிகளில் கொட்டி கிடந்த நிலையில் வயல் பகுதிக்கு சென்ற கிருஷ்ணகிருத்திக் என்ற சிறுவன் கழிவுகளில் கால் வைத்த நிலையில் கால் அழுகி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.

சிறுவனை சந்தித்த அமைச்சர் சிறுவனுக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கேட்ட நிலையில் கெமிக்கல் கழிவுகளை பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் வயல்களில் கொட்டுவதற்கு தடை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க சட்டமன்ற உறுப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர், மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி யில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம் அப்போது மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து ஆய்வு செய்ததில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில்
சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக கூறினார்கள்.

மேலும், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறி நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மருத்துவமனைக்கு என்று தனியாக மின்சார ட்ரான்ஸ்பார்மர் ஒன்று ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவமனைக்கு வந்தவுடன் முதல் கோரிக்கையாக அதைத்தான் கூறினார்கள். என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை படிப்படியாக செய்து வருகிறோம். வரும் காலங்களில் வாடிப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் உரிய வசதிகளை தமிழக முதல்வரிடம் கலந்து அனைத்தையும்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

அமைச்சருடன் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா வாடிப்பட்டி நிர்வாகி தமிழன் தாமு உள்பட பலர் இருந்தனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி. / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *