இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இந்திய தேர்தல் 01.01.2026 – தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 19.12.2025 அன்று கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து , ஏற்புரைகள் , மறுப்புரைகள் காலமானது கடந்த 19.12.2025 முதல் 30.01.2026 வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொது மக்களிடமிருந்து நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் பெறப்பட்டு வாக்குபதிவு அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி ஒவ்வொரு வாரமும் தொகுதி அளவிலான வாக்காளர் பதிவு அலுவலர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு படிவம் 9, 9A, 10 மற்றும் 11 ஆகியவை வழங்கப்பட்டது.மேலும் , இன்று நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து வாக்குச்சாவடிகள் உருவாக்கம், மறுசீரமைப்பு பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி /8939476777
