திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.


முதலாம் ராஜேந்திர சோழன் வடபுலம் சென்று திரும்பிய போது, பாலைவனம் மிகுந்த இந்த பகுதியில் தங்க நேர்ந்த போது, அவன்பால் அருள்கொண்ட இறைவன் அவன்மூலமாக ஜெயம் கொண்ட சோழமண்டலத்தில் திருபாலீஸ்வரராக தங்கி அருள்பாலித்து வருவதாகவும், தேவர்களும, அசுரர்களும் சேர்ந்து பாற்கடலில் அமிர்தம் கடைந்த பின்னர், இந்த கோயில் குளத்தில் கை அலம்பிய பொது அந்த குளத்து நீரில் கரைந்த அமிர்தத்தை தேவர்களுக்கு தெரியாமல் உண்பதற்காக குளத்தில் தவளை உருவத்தில் அசுரர்கள் இறங்க முயற்சி செய்தனர். அப்போது தவளை உருவத்தில் இருந்த அசுரர்களை தேவர்கள் சபித்ததாக வரலாறு, அதனால் இன்று வரை, இந்த கோயில் புஷ்கரணியில் தவளைகள் இல்லை என்பதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின் கடந்த 25-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, சங்கல்பம் ஸ்ரீமகாகணபதி ஹோமம் தொடங்கி ஒவ்வொரு நாளும் பூஜைகள் நடைபெற்ற நிலையில், இன்று பிரதான யாகசாலையில் விசேஷ ஹோமமும், நடைபெற்றது.

புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் யாக சாலையில் இருந்து எடுத்து செல்லப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
காலை 6 மணி முதல், 7.30 மணிக்குள் மகர லக்னத்தில் ஆலய பரிவார மூர்த்திகளுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழாவும், அதனை தொடர்ந்து 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் ஸ்ரீலோகாம்பிகை சமேத ஸ்ரீபாலீஸ்வரர் மற்றும் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும் திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.

இந்த விழாவில், மெதூர், திருப்பாலைவனம், பழவேற்காடு, பொன்னேரி, சென்னை மற்றும் சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோபுர கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது, நமசிவாய, ஹரஹர மஹாதேவா என பக்தர்கள் பக்தி பரவத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி செய்தியாளர் : மகேஷ் / 8939476777

