தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்களும், ஆயிரக்கணக்கான வாகனங்களும் திருப்பரங்குன்றம் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்கள் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். கோவில் நிர்வாகம் சார்பில் வாகனங்கள் நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி ஏற்பாடு. திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையம் எதிரே நிற்கும் வாகனங்களுக்கும் சட்ட விரோதமாக டோக்கன் விநியோகப்பட்டு அதன் மூலம் வசூல் வேட்டை நடைபெறுகிறது.

இங்கே வாகன காப்பகம் இல்லாத நிலையில், சரவண பொய்கையில் இருக்கும் வாகன காப்பகத்தின் ரசீதை வைத்து வெளியூர் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களிடமிருந்து 50, 100, 200 என வசூல் வேட்டை. திருப்பரங்குன்றத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்திற்கும் டோக்கன் வசூலிக்கப்படும் என்ற குற்றச்சாட்டும்.

கோவில் நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், மகளிர் காவல் நிலையம் மற்றும் திருப்பரங்குன்றம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் எதிரிலேயே நடைபெறும் இந்த போலி வாகன ரசீது வசூல் வேட்டை சம்பவத்தை காவல்துறையினரும் கண்டு கொள்ளாததால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் மன வேதனையுடன் வந்து செல்கின்றனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed