திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப் அவர்கள் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர், அதனை தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில், புறாக்களை வானில் பறக்க விட்டும், நமது நாட்டின் தேசிய கொடியின் நிறத்தில் பலூன்களை வானில் பறக்கவும்விட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்க பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 900 பேருக்கு அவர்கள் சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

பின்னர், அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் மற்றும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

பின்னர், நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் நிகழ்வில், வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை, சமூக நலத்துறை உட்பட பல துறைகளின் வாயிலாக நல்ல திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். அதில், ஏ.பி.எஸ். ஸ்மார்ட் குளோபல் பள்ளி, இம்மாகுலேட் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஆர்.எம்.ஜெயின் மேல் நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நிகேதன் மேல்நிலைப்பள்ளி, கிரைஸ்ட் கிங் மேல் நிலைப்பள்ளி மாணவர்களும், அயப்பாக்கம் சிலம்பம் பாசறை மாணவர்களும், நாட்டிய நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி மற்றும் யோகா, சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். அவர்களையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டி, வாழ்த்தினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட இயக்குனர் / இணை இயக்குனர் வை.ஜெயக்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ப.ஜெயஸ்ரீ உட்பட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் செய்தியாளர் : மாறன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed