தேமுதிக இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து தகவல்!

தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேய்குளம் ஊராட்சிக்கு “மக்களைத் தேடி மக்கள் தலைவர்” என்ற தலைப்பில் “உள்ளம் நாடி இல்லம் தேடி” என்ற கேப்டனின் ரதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார். பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சித்திரைராஜ் வழிகாட்டுதலின்படி ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரூர் முருகன், துணை செயலாளர் சங்கரபாண்டியன், கிளைச் செயலாளர் துரை, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து தலைமையில் பேரூரில் பொதுமக்கள் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து வெள்ளமடம், குப்பாரம், சின்னமதிக்கூடல், குறிப்பன்குளம், அம்பலச்சேரி, கட்டாரிமங்கலம் பகுதிகளில் ஆழ்வார்திருநகரி பேரூர் கழக செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர் முருகையா, தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்ராஜா முன்னிலையில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு வரவேற்பு அளித்தனர். பழனியப்பாபுரத்தில் கிளை செயலாளர் சிவா நாடார், ஜெயலெட்சுமி குடும்பத்தினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

பேய்குளம் பொதுக்கூட்டத் திடலில் மாவட்டச் செயலாளர் சித்திரை ராஜ் தலைமையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் கழக துணைச் செயலாளர் சந்திரன், தென்மண்டல துணைப் பொறுப்பாளர் தாமரைக்கண்ணன், திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர் சதீஷ், ஸ்ரீவைகுண்டம் தொகுதித் பொறுப்பாளர் ஸ்டீபன் மரியதாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், பொன்ராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் பேச்சியம்மாள், பிரகாச வினோத், அப்பாஸ், கரடி முத்து, இசக்கிமுத்து ஒன்றியச் செயலாளர்கள் சுரேஷ், பேரூர் முருகன் முத்துமாரி, சேக்அன்சார், ஆனந்தபாலன், காதர்முகைதீன், லூக்காஸ் பிரேம்ராஜ், நகரச் செயலாளர் முத்துக்குமார், நாராயணமூர்த்தி, விஜய் ஆனந்த், பேச்சிமுத்து, உலகநாதன்,

ஏரல் பூக்கடை கண்ணன் செல்வம், இஸ்மாயில், தொழிற்சங்கம் அப்துல்காதர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சித்திரை ராஜிக்கு தேமுதிக நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

நெல்லை செய்தியாளர் :
செ.பா.தவசிக்கனி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed