கும்மிடிப்பூண்டி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எம்.சம்பத் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஏ.எம்.சேகர், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் எஸ்.சரவணன், எஸ்.ரோஸ்குமார், கே.கோதண்டன், பி.ராமச்சந்திரன், எம்.புருஷோத்தமன், எம்.ஜெடராயன், வழக்கறிஞர் கேசவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் பங்கேற்று தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் , இந்தியாவின் ஜனநாயகத்தை கட்டி காப்பதில் அரசியலமைப்பு சட்டம் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின் இதய பகுதியாக கருதப்படும் பகுதி 3, 4 பொதுமக்களுக்கான அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன் , பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளையும் தந்து ஜனநாயகத்தை கட்டி காக்கின்றது என்றவர், அத்தகைய சிறப்பு வாய்ந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய மகான்களை நாம் என்றென்றைக்கும் போற்றிட வேண்டும் என்றார்.

கும்மிடிப்பூண்டி செய்தியாளர் :
ஜான் பிரான்சிஸ்
