அய்யா தர்மயுகவழி பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் தருவை அய்யாவழி மா.முருகன், திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், தமிழர் பண்பாடு மற்றும் மரபுக்கு எதிராகவும், செயல்பட்டு வரும் தமிழ்நாடு கவர்னரை தகுதி நீக்கம் செய்ய அல்லது திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டு முதல்வர், தமிழக சட்டசபையில் கூறியபடி, சட்டமன்றத்தில் கவர்னர் உரை நிகழ்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதற்கு. கண்டனம் தெரிவிப்பதுடன், மீண்டும் பழைய பெயரிலேயே இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு, தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர திமுக தலைமையிலான கூட்டணிக்கு அய்யா தர்மயுக வழி பேரவையின் ஆதரவை தெரிவிக்கிறோம். இவ்வாறு தென்மண்டல பொறுப்பாளர் தருவை அய்யாவழி மா.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அய்யா தர்மயுகவழி பேரவையின் தென் மண்டல மகளிர் பொறுப்பாளர் வி.ராமலட்சுமி பாலமுருகன், தென் மாவட்டப் பொறுப்பாளர் வி.சிதம்பரம், நெல்லை மாவட்ட பொறுப்பாளர் செ.பெருமாள், சமூக ஒற்றுமை ஆர்வலர் கூட்டமைப்பு நிர்வாகி பாளை. செய்யது ஆகியோர் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி, செய்தியாளர் : தவசிகனி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed