
’இரத்த தானம் செய்வோம், நம்பிக்கையை அளிப்போம் உயிர்களை காப்போம்’ என்ற உலக சுகாதார மையத்தின் 2025 ஆண்டுக்கான மையக்கரு தலைப்பில், புதுச்சேரி ஜிப்மர் இரத்ததான மையம் தொடர்ந்து பல்வேறு முகாம்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. வருகிற 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜிப்மரில் ஊழியர்களுக்கான இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமை, ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நேகி அவர்கள் துவக்கி வைத்தார். ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சகா வினோத் குமார் மற்றும் ஜிப்மர் இரத்த தான மையத்தின் துறை தலைவர், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.
செய்தியாளர் : நாகை,
நா.மணிவண்ணன்
