விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் ஏ பி ஜி பியூட்டி அகாடமி இணைந்து மத்திய அரசின் பெண்களுக்கான இலவச அழகுகலை மற்றும் தையல் கலை பயிற்சிகளை நடத்தின. ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்ற இப் பயிற்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்ப பயிற்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் விழா வத்திராயிருப்பு வ உ சி அரங்கில் நடந்தது.

இயக்குநர் எதிந்திரன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர்
மோகன்குமார் முன்னிலை வகித்தார். உதவி அலுவலர் காளீஸ்வரி வரவேற்றார். வத்திராயிருப்பு
வட்டாட்சியர் சரஸ்வதி, காவல்துறை சார்பு ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் பயிற்சிகளில் முதன்மை பெற்றவர்கள் மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

வத்திராயிருப்பு தலைமை காவலர் காளீஸ்வரி, அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் அனுசுயா சீனிவாசன் ஆகியோர் பயிற்சிகளில் முதன்மை அடைந்த மாணவர்களை பாராட்டி உரையாற்றினர். லதா திட்ட அறிக்கை வாசித்தார். அகாடமி தலைவர் ஆதிலட்சுமி விழாவை தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி
முத்துபாண்டி நன்றியுரை ஆற்றினார்.

செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed