கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை , கோயம்புத்தூர், ஞான சஞ்சீவனம் குருகுலம் ஆகியவை இணைந்து நடத்தும் லிங்கன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனைக்கான மாபெரும் புத்தக வெளியீட்டு விழா  கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
 
விழாவிற்கு , ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர் , முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கோவை, ஸ்கை நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஸ்கை வி.சுந்தரராஜ்  கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
    
அதைத் தொடர்ந்து, புத்தக வெளியீட்டில் ஒரு சாதனை நிகழ்ச்சியாக, “ஞான அவதாரம்” எனும் பொருண்மையில் முதன்முறையாகப் படைப்புகளை வெளியிடும் 28 எழுத்தாளர்கள் எழுதிய 28 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டு சாதனை .
      
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதனோடு இன்னும் சில முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியிடப்பட்டன. 

இந்த விழாவில் மொத்தமாக 35 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த விருதினைக் கல்லூரியின் முதல்வர் , செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் , தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த.விஸ்வநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் செயலர் , கோவை, ரூட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெடின் இயக்குநருமான டாக்டர் கவிதாசன் “எழுத்து தவம்! வாசிப்பு வரம்! என்னும் தலைப்பில் தன்னம்பிக்கை உரை வழங்கினார். பின்னர், கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம், மெய்ஞ்ஞானப் பேச்சாளர் ஸ்ரீ சசிகுமார் நூல்களுக்கான ஏற்புரை வழங்கினார்.

முன்னதாக, விழாவில் தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் த.விஸ்வநாதன் அனைவரையும்வரவேற்றார். விழாவில் , மாணவர் – மாணவியர்கள், பேராசிரிய பெருமக்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இவ்விழாவினை தமிழ்த்துறைப் பேராசிரிய பெருமக்கள், மாணவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம், ஸ்ரீ சசிகுமார் நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed