ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு வளாகத்தில் உள்ள இராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடனை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டார்.
முன்னதாக , மாவட்ட ஆட்சித்தலைவர் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது , தேர்தல் வட்டாட்சியர்கள் அமர்நாத் , காளீஸ்வரன் , அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி , அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
