
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிப்பில் வெளியாகும் "லீடர்" திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சேலம் குகை ராஜசபரி தியேட்டரில் லீடர் திரைப்படம் திரையிடப்பட்டதை கொண்டாடும் வகையில், தியேட்டர் முன்பு அகில இந்திய லெஜன்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்ற சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைமை மன்றம் சார்பில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், நடிகர் லெஜன்ட் சரவணன் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தும், இயந்திரம் மூலம் வண்ண காகிதங்களை தூவியும் ஆரவாரத்துடன் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்கிக்கு, அகில இந்திய லெஜன்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்ற சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சபரி, ஜெகன், மௌலி, நவீன், கிசோர், கோபி, கார்த்தி, அன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுக்கம்பட்டி பிரபு செய்திருந்தார்.

சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை
9442979467.
