சோழவந்தான்
, மார்ச்.26-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே நீரேத்தான் பாப்பம்மாள், நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மாலை 3 மணிக்கு பெரிய பூசாரி வீட்டில் இருந்து பெரிய பூசாரி அழைத்து வந்து கோவிலில் பெட்டி எடுத்து சாமியாடிகளுக்கு அருள் இறக்கப்பட்டு தாதம்பட்டி, நீரேத் தான், புதூர், ராமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வீதி உலா வந்து கோயிலை அடைதல். மாலை 6 மணி முதல் 7
மணி நேரம் வரை விக்னேஸ்வர பூஜை இரண்டாம் நாள் காலை 9 மணி முதல் 12.15 | மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 8.30 மணிவரை பல்வேறு பூஜைகள் செய்து முதல் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டது. மூன்றாம் நாள் காலை 8.30 மணி முதல் 11மணி வரை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரைமூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நான்காம் நாள் காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை செய்யப்பட்டது. இந்த யாகசாலை பூஜையில் தேவார திருமுறை பாராயணம் பாடப்பட்டது.
9 மணிக்கு மகாபூர்ணாகதி, 9.15 கலசங்களுடன் புறப்பாடு நடந்தது. .9.45 மணிக்கு காசி இராமேஸ்வரம் அழகர் கோயில் பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் ஊற்றி
ராஜகோபுரம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 10.10 மணிக்கு மூலாலய கும்பாபிஷேகமும், பாப்பம்மாள் நாச்சாரம்
மாளுக்கு சிறப்பு மகாஅபிஷேக ஆராதனை அர்ச்சனைகளும் செய்யப்பட்டது.10.30 க்கு சந்தை வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை விஜயரங்கன் உள்ளிட்ட கோயில் திருப்பணி குழுவினர் செய்தனர் யாகசாலை பூஜைகள் திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் என்ற சந்திரசேகர் பட்டர் சிறப்பு அழைப்பாக கற்பூர பாலசுப்பிரமணியப்பட்டர் செந்தில் பட்டர் ஹாலாஸ்யநாத பட்டர் ஆகியோர் செய்தனர் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed