வங்கக்கடலில் உருவான முரசு புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையை கடக்க இருப்பதால், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராமம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்வதற்கும் மாவட்ட ஆட்சியர் கவிதா அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்ஹர்பிரபு தலைமையான அதிகாரிகள் பழவேற்காடு பகுதியில் உள்ள கேம் மீனவ கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகளையும் தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
