ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நேற்று தாயார் ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடந்த நிலையில், இன்று பகல் வரை, உலகை ஆளும் திவ்ய தம்பதியர்களுக்கு இன்று அதிகாலை நடக்க வேண்டிய அரவணை கொடுக்கப்படவில்லை அதற்குக் காரணம்…
பரிசாரகர்களுக்கும் – அரச்சகர்கள் இடையே நடந்த மோதலால் ஸ்ரீரெங்கநாதருக்கும் – தாயார் ஆண்டாளுக்கும் எந்த ஒரு பூஜையும் நடக்கவில்லை, இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய செயல் அலுவலரும் ஊரில் இல்லாததால், நேற்று இருந்து இன்று மதியம் வரை எந்தவிதமான பூஜைகளும் நடைபெறாமல் அனைத்தும் தடைபட்டு இருக்க கூடிய சூழ்நிலை நிலவியது.

பின்னர், செயல் அலுவலர் வந்து அதன் பின்னர் பிராயசித்த பரிகாரம் செய்த பின்னரே தளிகை அம்சை செய்யப்பட்டதாக அங்கிருந்த பக்தர்கள் வேதனைப்பட்டார்கள். மனிதர்கள் என்றால் பிரச்சனை இருக்கும், அதை தீர்க்க வேண்டியவர்கள் அமைதியாக இருப்பதுவும், தெய்வங்களை பட்டினி போடுவதும் நல்லதில்லை,




பிராயச்சித்தம் செய்யும் அளவிற்கு தாயார் ஆண்டாள் சன்னதியில் நடந்தது என்ன? என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர், மேலும் படியளக்கும் அன்னபூரணியான தாயார் ஆண்டாளுக்கு நடந்தது அநியாயத்தின் உச்சம் என்கின்றனர் பக்தர்கள், இந்த பிரச்சனைக்கு காரணமவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும், இல்லாவிடில் பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடக்கும் என பக்தர்கள் பேசுவது மன வேதனையாக அமைந்தது.




தாயார் ஆண்டாள் திருவடிகளே சரணம்…
எதிரொலி / 8939476777
