இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழைமை வாய்ந்த போர்சியுங்குலா பரிபூரண பலன் பெற்ற கிழக்கு கடற்கரையின் இறை இரக்கத்தின் நுழைவாயில் என்று சொல்லக்கூடிய புதுமை புகழ் தூய செங்கோல் மாதா திருத்தலத் தேவாலயம் உள்ளது. இதில் புனித வெள்ளியை முன்னிட்டு புனித சிலுவைப் பாதை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அருள் தந்தை ரெமிஜியஸ், அருள் தந்தை அருள் தாஸ், அருள் தந்தை ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் சிலுவை முத்தி செய்தலும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அருள் சகோதரர் சார்லஸ் அருள் சகோதரிகள் செல்வம், ஞான சுகந்தா, அமலோற்பவம் கோயில் பிள்ளை ஆண்டனி ரோமியோ ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட இறை மக்கள் கலந்துக் கொண்டனர்.
சம்பை புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிலுவை பாதையும், சிறப்பு திருப்பலியும் பங்குத்தந்தை செல்வகுமார், உதவி பங்குத்தந்தை பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.


தொண்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் பங்குத் தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் சிலுவை பாதை பங்கு மக்களால் நடித்துக் காட்டப்பட்டது. பின்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குருமிலாங்குடி புனித சுவக்கின் அன்னாள் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜேம்ஸ் ராஜா தலைமையில் சிலுவை பாதையும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்தனர்..
