கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக கட்சியினையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கூட்டணி கட்சி சார்பில், மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் இந்தியா கூட்டணி கட்சி சார்ப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தல் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு, திமுக மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் ஶ்ரீராம், திமுக ஒன்றிய செயலாளர்கள் தேங்காய் சுப்பிரமணியன், மகேந்திரன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக ஒன்றிய பாஜக அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கும் வணிக ரீதியான கேஸ் சிலிண்டருக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். இதனால் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசையும் அதன் அடிமை அதிமுக கூட்டணியையும் கண்டித்து உடனடியாக தட்டுப்பாடின்றி அனைவருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து, உயர்த்தப்பட்ட விலையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட மீனவர் அணித் தலைவர் செல்வம், மாவட்ட கலைப் பிரிவு தலைவர் கோவிந்தசாமி, நகர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர் சுரேஷ் பாபு, மாவட்ட மகளீர் அணித்தலைவி, உமா மகேஷ்வரி, மாவட்ட விவசாய அணி தலைவர் ராமசந்திரன், துணைத் தலைவர் சக்திவேல், நகர பொறுப்பாளர் மாரியப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்த்த சிவகுமார், எழில் பாரதி, மீனா, மங்கை, யஜோதா, ரகு, சசிகுமார், பெருமாள், தங்கையா, கிருஷ்ணன், கலையரசன், நாமக்கார கோவிந்தசாமி பூபதி, திமுக நகர செயலாளர் பாபு, பேரூர் கழக செயலாளர் தம்பி துரை உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக கட்சியையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேமுதிக, விசிக விடுதலை சிறுத்தை உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed