மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில்;-

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அது தொடர்புடைய காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும் என அவரது உறவினர்கள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசிக சார்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆகாஷ் படுகொலை தொடர்புடைய காவல்துறை யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதோடு. குடும்பத்தில் ஒருவர் அரசு வேலை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தூத்துக்குடி அருகே, பள்ளி மாணவி பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்திகிறோம்.

அமெரிக்கா ஈரான் போர் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என பிரதமர் வாய் திறந்து கோரிக்கை வைக்கவில்லை. போர் நிறுத்த வேண்டும் என பிரதமருக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என திமுக தான் விரட்டியதுயதாக ஆதவ் அர்ஜுன் கூறியது, அது அவரின் கற்பனை…

ரஜினி ஆர்வம் காட்டக் கூடியவர் அல்ல, மயங்க கூடியவரல்ல. வெளியேறிவிட்டார் விலகி நிற்கிறார். அவரை ஆசை காட்டி அரசியலுள் இழுக்க முடியாது, அச்சுறுத்தி வெளியேற்ற முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். இது, ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடிய ஒரு பிரச்சனை.

எத்தனை தொகுதி ஒதுக்கீடு ? பேச்சுவார்த்தை முடித்த பிறகு முறைப்படி அறிவிப்பு செய்யப்படும்.

சசிகலா அம்மையாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அரசியல் ரீதியாக என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திமுக கூட்டணியை எதிர்க்க கூடிய கூட்டணி உருவாக்கவில்லை அதிமுகவும் சிதறியுள்ளது. திமுகவை எதிர்க்கக்கூடிய எதிர் கூட்டணி உருவாகவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. என்றார்.

செய்திகள் : காளமேகம் / மதுரை எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed