இந்தியாவின் இரும்பு மனிதர் பாரத ரத்னா ஸ்ரீ சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக சேவகர் எஸ்.பாலாஜி மற்றும் பொன்னேரி முருகன் ஹோட்டல் நண்பர்கள் குழு, சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல் ஆட்டோமெட்டிரி சர்வீஸ் கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் மற்றும் தாஸ்யா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் தமிழ்நாடு கிட்னி ரிசர்ச் ஃபவுண்டேஷன் நடத்தும் சிறுநீரக பரிசோதனை முகாம் நடைபெற்றது. பொன்னேரி முருகன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த முகாமில் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவில் தலைமை வகித்த டாக்டர் ஜனனி உள்ளிட்ட குழுவினர் சிறுநீரக பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் கண் சம்பந்தப்பட்ட நவீன பரிசோதனைகள் செய்தனர்.

நிகழ்ச்சியினை, முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலாஜி துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் சிவகுமார் , கோடீஸ்வரன்,இளங்கோவன்,விஜயசங்கர்,சுகன்யா,பூபதி,சங்கர்,ஜெகதீசன்,சந்திரன் மற்றும் காசியாராமன்,ஸ்ரீராம் ஜி,சசிபாபு,பூபதி,ரகுநாத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். முகாமில் 105 சிகிச்சையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் 85 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
செய்திகள் பழவை முத்து எதிரொலி
